நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP மர்ம பூமியில் மறைந்துள்ள அதிசயம் !!  அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்றும் பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத மர்மங்களை பற்றி இன்று பார்ப்போம். 👉 கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. 👉 மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா (Racetrack Playa) எனப்படுகிறது. இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ, உயிரினங்களோ, மரம் மட்டைகளோ எதுவும் கிடையாது. 👉 இந்த மர்ம பூமியில் தான் கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது இன்றும் புதிரான விஷயமாகவே இருக்கிற...
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்!  கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோவில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். இவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன. 😯 விடை தெரியாத மர்மங்களுள் இன்று நாம் பார்க்க இருப்பது... மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து தான்... 😯 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை அருகே கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பாறை அமைந்துள்ளது. இது வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. 😯 இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடி சாப்பிட்ட செயலை நினைவுக்கூறும் வகையில் இக்கல்லை கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படுகிறது. சிறப்பு : 😯 உலகமே வியந்து பார்க்கக்கூடிய மர்மங்கள் நிறைந்த கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து பாறை, சுமார் 1200...
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP வாரம் ஒருமுறை ஏற்படும் விபத்து... புரியாத புதிர்... லாவோஸ் ஜாடிகள்!  லாவோஸ் நாட்டில் ஜிங் குவாங் என்ற சமவெளி உள்ளது. இது ஜார்ஸ் சமவெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் விசித்திரமான, தொன்மையான ஜாடிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. இந்த ஜாடிகளில் பெரும்பாலானவை மணற்கற்கள், சுண்ணாம்புகற்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஜாடிகள் இரும்பு உளிகளை கொண்டு கற்களை குடைந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இவ்வளவு ஜாடிகளையும் எந்த நாகரீகத்தை சார்ந்த மனிதர்கள் கட்டியிருக்கிறார்கள், எந்த நோக்கத்திற்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தொல்லியலாளர்களுக்கு இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமும், 13 டன்கள் வரை எடையும் கொண்டவை. இந்த ஜாடிகளின் உண்மையான பயன்பாடு என்னவென்று தெரியவில்லை. இறந்தவர்களை புதைப்பதற்கு இவை பயன்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்...
Comments
Post a Comment