ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறைகள் - Aadhar Card Apply! ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே ஆதார் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்: ⚡ அடையாள அட்டை ⚡ இருப்பிடச் சான்று ✅ அடையாள அட்டைக்கு சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, அரசு ஐடி கார்டு இவற்றுள் ஒன்றை நீங்கள் வழங்கலாம். ✅ இருப்பிடச் சான்றாக கடைசி மூன்று மாதங்களுக்குள் செலுத்திய தண்ணீர் கட்டண ரசிது, மின்சார கட்டண ரசிது அல்லது தொலைபேசி கட்டண ரசீது) இவைகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக வழங்கலாம். ✅ ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. / எம்.எல்.ஏ. / கெசட்டட் ஆபீசர் / தாசில்தார் / பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ்கள் சான்றாக எடுத்து கொள்ளலாம். ஆதார் பதிவு: பிறகு, பதிவு படிவத்தை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும். படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையமுகவரிக்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தை பதிவ...